நாட்காட்டி

Article in other languages:

இந்து நாட்காட்டி ஒன்றிலிருந்து ஒரு பக்கம் 1871–1872.

நாட்காட்டி என்பது, நாளைக் காட்டுவது என்ற பொருளைக் கொடுத்தாலும்; இது உண்மையில்; சமூக, சமய, வணிக, நிர்வாக நோக்கங்களுக்காக நாட்களை ஒழுங்கு படுத்தும் ஒரு முறை ஆகும். இது, நாட்களைச் சேர்த்துக் கிழமைகள், மாதங்கள், ஆண்டுகள் எனவாக்கி அவற்றுக்கு பெயர்களும் வழங்குவதன் மூலம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு நாளுக்கும் கொடுக்கப்படும் பெயர் தேதி அல்லது "திகதி" எனப்படுகிறது. நாள், மாதம், ஆண்டு முதலிய காலப் பகுப்புக்கள், பொதுவாகச் சூரியன், சந்திரன் முதலியவற்றின் இயக்கங்கள் போன்ற வானியல் தோற்றப்பாடுகளுக்கு இயைபாக அமைந்துள்ளன எனினும் அவை துல்லியமாகப் பொருந்திவர வேண்டியது இல்லை. பண்டைக் காலத்தில் இருந்தே பல பண்பாடுகளும் தமக்கென நாட்காட்டிகளை உருவாக்கிப் பயன்படுத்தி உள்ளனர். இவற்றுட் பல பிற நாட்காட்டிகளை மாதிரியாகக் கொண்டு தமக்குப் பொருத்தமாக அமையும்படி உருவாக்கப்பட்டவை.

நாட்காட்டி என்பது இது தொடர்பான தகவல்களைக் கொடுக்கும் ஒரு பொருளையும் குறிக்கின்றது. பொதுவான வழக்கில், நாட்காட்டி என்பதன் மூலம் புரிந்து கொள்ளப்படுவதும் இதுவே. பொதுவான நாட்காட்டிகள் கடதாசியால் செய்யப்பட்டவை. தற்காலத்தில் பல்வேறு வசதிகளுடன் கூடிய மின்னணு நாட்காட்டிகளும் உள்ளன.


தமிழ் நாட்காட்டி விட்ஜெட்

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது

Questions for article:

This article is from Wikipedia. All text is available under the terms of the GNU Free Documentation License.


IHS Europe: Infrared Heating Systems for Home and Business.